முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.4.26 லட்சம் கோடி காலி..

முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.4.26 லட்சம் கோடி காலி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 812 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி விட்டது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டதால் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.4.26 லட்சம் கோடி காலி..
கோடக் மகிந்திரா வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி, இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.4.26 லட்சம் கோடி காலி..
இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 579 நிறுவன பங்குகளின் விலை 2,194 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.76 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4.26 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.4.26 லட்சம் கோடி காலி..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 811.68 புள்ளிகள் சரிந்து 38,034.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 254.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,250.55 புள்ளிகளில் முடிவுற்றது.