இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ், இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்சமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி விட்டது. கொரோனாவுக்கு 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியா-சீனா எல்லை விவகாரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எல்லை தொடர்பான எந்தவொரு செய்தியும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு
எல்லையில் வீரர்கள்

அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.1,276 கோடிக்கு பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.5,667 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டை தொடர்ந்து அதிகரிப்பார்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர். வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்று செப்டம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும்.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்… நிபுணர்கள் கணிப்பு
மும்பை பங்குச் சந்தை

ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் மூன்றாவது பங்கு வெளியீடு, CAMS & Chemcon Speciality Chemicals ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடு, ரூட் மொபைல் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியிலடப்படுவது போன்ற நிகழ்வுகள் இந்த வாரம் நடக்க உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது சில முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.