எல்லை விவகாரம், கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்-நிபுணர்கள் கணிப்பு

எல்லை விவகாரம், கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்-நிபுணர்கள் கணிப்பு

எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு, நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேசமயம் எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் படைகளை பலப்படுத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. வேதாந்தா, மேக்ஸ் இந்தியா, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆனந்த் ராஜ், செயில், ரேமண்ட் மற்றும் வில்சன் சோலார் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை இந்த வாரம் வெளியிட உள்ளன.

எல்லை விவகாரம், கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்-நிபுணர்கள் கணிப்பு
இந்திய -சீன ராணுவ வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 லட்சத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத மொத்த விலை மற்றும் சில்லறை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் வரும் 17ம் தேதியன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

எல்லை விவகாரம், கொரோனா உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்-நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கூட்டம் நாளை தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் புதன்கிழமை நள்ளிரவில் வெளியாகும். சீனா, ஐப்பான், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது. இதுதவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.