சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி லாபம்

சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய அரசு நேற்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு கடந்த ஜூன் காலாண்டின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி வாங்குமோ என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அதற்கு எதிர்மாறாக இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி லாபம்
பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ்,ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, டெக் மகிந்திரா, இன்போசிஸ் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி லாபம்
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,203 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,453 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 162 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.51 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.51 லட்சம் கோடி லாபம்
தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 272.51 புள்ளிகள் உயர்ந்து 38,900.80 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,470.25 புள்ளிகளில் முடிவுற்றது.