2020 ரீவைண்ட் : லாக்டவுனில் எளிமையாக நடந்து முடிந்த பிரபலங்களின் திருமணம்!

 

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

2020 ஆம் ஆண்டை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. கொரோனா என்ற பெருந்தொற்று பரவி பல உயிர்களை காவு வாங்கிய மோசமான ஆண்டாக 2020 அமைந்தது என்பது பலரின் கருத்து. அத்துடன் பரவலை தடுக்க பிறப்பிக்க ஊரடங்கு பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கின. குறிப்பாக திருமணம் செய்ய எண்ணி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பாதியிலேயே தடைப்பட்டு நின்றன. இருப்பினும் பல திருமணங்கள் வீட்டிலேயே எளிமையாக நடந்தது. இன்னும் சில பேர் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்டனர். அந்த வகையில் இந்த பேரிடர் காலத்தில் இல்வாழ்க்கையில் இணைந்த பிரபலங்கள் குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்!

நடிகர் யோகி பாபு- மஞ்சு பார்கவி திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து காமெடி ரோலில் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி குலதெய்வ கோவிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது .  மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வரவேற்பு நிகழ்ச்சி தடைப்பட்டு போனது. இதை தொடர்ந்து கடந்த 28ஆம் யோகி பாபு- மஞ்சு பார்கவி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மானஸ் – சுபிக்க்ஷா திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

சின்னத்திரை நடிகை ஆல்யா மானஸா, மானஸ் என்பவரைக் காதலித்து வந்த நிலையில்  கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார். இதை தொடர்ந்து அவர் சக நடிகரான சஞ்சீவ் கார்த்திக்கை
காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஆல்யாமானஸாவின் முன்னாள் காதலர் மானஸ், சுபிக்க்ஷா என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டார் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் அவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.    இதை தொடர்ந்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

நடிகை நக்ஷத்ரா – சத்யானந்தன் திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

இயக்குநர்  பாரதிராஜா மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் இயக்கி தயாரித்த திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை படத்தில் நடித்த நடிகை நக்ஷத்ராவுக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த சத்யானந்தன் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில் இயக்குநர்  பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், அமீர், இசை அமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் மகத் – பிராச்சி மிஷ்ரா திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

ஜில்லா, மங்காத்தா படங்களில் நடித்தவர் மகத் . இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இதையடுத்து மகத்துக்கும் காதலி பிராச்சிக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  பெற்றோர் சம்மதத்துடன்   நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  இதை தொடர்ந்து மகத் மற்றும் பிராச்சி மிஷ்ரா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம்  நடந்தது. இதில் நடிகர் சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் ராணா டகுபதிமிஹீகா திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

பாகுபலி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் நடிகர் ராணா டகுபதி. தமிழில் ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகன் என்பது கூடுதல் தகவல். இவர் ஹைதராபாதைச் சேர்ந்த தனது காதலி மிஹீகா பஜாஜை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். ராணா திருமணத்தில் சமந்தா, நாகசைதன்யா, வெங்கடேஷ், ராம் சரண் என நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

நடிகை காஜல் அகர்வால் – கவுதம் கிச்சலு திருமணம்

2020 ரீவைண்ட் : லாக்டவுனில்  எளிமையாக நடந்து முடிந்த  பிரபலங்களின் திருமணம்!

விஜய், அஜீத், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இதையடுத்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் காஜல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவு சென்ற காஜல் – கவுதம் கிச்சலு தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடடு லைக்ஸ்களை வாரி குவித்தனர்.