குறையும் பாதிப்பு.. அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சியூட்டும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

 

குறையும் பாதிப்பு.. அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சியூட்டும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,020 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துவிட்டது. 4 லட்சத்துக்கு மேல் இருந்த பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை எட்டியது. அந்த மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக பாதிப்பு இன்று 31,443 ஆக குறைந்துள்ளது. ஆனால், உயிரிழப்புகள் 2 ஆயிரத்தை எட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறையும் பாதிப்பு.. அதிகரிக்கும் மரணங்கள் : அதிர்ச்சியூட்டும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 31,443 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 2,020 பேர் உயிரிழந்ததாகவும் 4,32,778 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,10,784 ஆக அதிகரித்துள்ளதாகவும் 49,007 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

118 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 31,443 ஆக குறைந்திருப்பதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 49,007 ஆக அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருந்தாலும் கொரோனா மரணங்கள் 2 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி இருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.