குடியரசுத்தலைவர் உரை புறக்கணிப்பில் திமுக, விசிக உள்ளிட்ட 20 கட்சிகள்

 

குடியரசுத்தலைவர் உரை புறக்கணிப்பில் திமுக, விசிக உள்ளிட்ட 20 கட்சிகள்

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையற்றிவருகிறார். திமுக, விசிக உள்ளிட்ட 20 கட்சிகள் குடியரசுத்தலைவர் உரையினை புறக்கணித்துள்ளன.

விவசாயிகள் மீதான அடக்குமுறையின் காரணமாக குடியரசுத் தலைவர் உரையைப் புறக்கணிக்கிறோம்! என்று விசிக அறிவித்திருக்கிறது.

குடியரசுத்தலைவர் உரை புறக்கணிப்பில் திமுக, விசிக உள்ளிட்ட 20 கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை அறிவித்திருக்கிறார். அவர் மேலும்,
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பது ஒன்றே நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக நடப்பதற்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம்லீக், ஆர்.எஸ்.பி., எம்.டி.எம்.கே., மக்கள் ஜனநாயக கட்சி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக கட்சி,கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

குடியரசுத்தலைவர் உரை புறக்கணிப்பில் திமுக, விசிக உள்ளிட்ட 20 கட்சிகள்

ஆம் ஆத்மி, ஷிரோமணி அகலாலிதளம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் என தனித்தனியாகவும் உரையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயெ எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பை செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.