அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது… உற்சாகத்தில் மத்திய அரசு..

அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது… உற்சாகத்தில் மத்திய அரசு..

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்த லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை காட்டிலும் குறைந்தது. அது முதல் கடந்த செப்டம்பர் வரை ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தொடவில்லை. தற்போது லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு கிட்டத்தட்ட தளர்த்தி விட்டது மேலும் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுக்க தொடங்கி விட்டன.

அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது… உற்சாகத்தில் மத்திய அரசு..
ஜி.எஸ்.டி.

இதனால் பலனாக கடந்த அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019 அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.95,379 கோடியாக இருந்தது. ஆக, 2020 அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் 10 சதவீதம் அதிகமாகும். நிதிப்பற்றாக்குறையால் தவிக்கும் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளது பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.

அக்டோபரில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது… உற்சாகத்தில் மத்திய அரசு..
ஜி.எஸ்.டி.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.