கொரோனா, நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா, நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ் நிலவரம், நிறுவனங்களின் நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய அரசு வரும் வாரங்களில் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில் புதிய நிதி ஊக்குவிப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வாரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 1 லட்சத்தை கடந்து விட்டது.

கொரோனா, நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
உச்ச நீதிமன்றம்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்த வாரம் முதல் வெளியிட உள்ளன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 5 பைசா கேப்பிட்டல் உள்பட பல நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உடல் நலம் மற்றும் அந்நாடும் மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்புகளை அறிவிக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா, நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதாரம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.