முதலீட்டாளர்களுக்கு கருப்பு வாரம்…. 5 தினங்களில் ரூ.2.67 லட்சம் கோடி நஷ்டம்..

 

முதலீட்டாளர்களுக்கு கருப்பு வாரம்…. 5 தினங்களில் ரூ.2.67 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 1,071 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் வீழ்ச்சி கண்டது. கடந்த 5 வர்த்தக தினங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் பங்கு வர்த்தகம் அடி வாங்கியது. சில முன்னணி நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது, கடந்த செப்டம்பர் காலாண்டில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி கண்டது, அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் போன்றவை பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலீட்டாளர்களுக்கு கருப்பு வாரம்…. 5 தினங்களில் ரூ.2.67 லட்சம் கோடி நஷ்டம்..
கோவிட் 19 பரிசோதனை

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.90 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 23ம் தேதி) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.57 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.67 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு கருப்பு வாரம்…. 5 தினங்களில் ரூ.2.67 லட்சம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி


நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,071.43 புள்ளிகள் குறைந்து 39,614.07 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 287.95 புள்ளிகள் சரிவு கண்டு 11,642.40 புள்ளிகளில் முடிவுற்றது.