முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்குச் சந்தைகள்… ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்…

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்குச் சந்தைகள்… ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல், பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நவம்பர் 3ம் தேதியன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகின்றனர். வங்கி துறைகளை சேர்ந்த பங்குகள் இன்று பலத்த அடி வாங்கின இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்குச் சந்தைகள்… ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்…
பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், டெக்மகிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்குச் சந்தைகள்… ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்…
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 997 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,635 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.19 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.54 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களை கதி கலங்க வைத்த பங்குச் சந்தைகள்… ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்…
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 599.64 புள்ளிகள் சரிந்து 39,922.46 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 159.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,729.60 புள்ளிகளில் முடிவுற்றது.