பலத்த அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்தது..

 

பலத்த அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.98 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் நிதி முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால் அதன் தாக்கம் உலோக துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் எதிரொலித்தது. பல உலோக நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கி இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது.

பலத்த அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்தது..
பஜாஜ் ஆட்டோ

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், நெஸ்லே இந்தியா, கோடக் மகிந்திரா வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பவர் கிரிட் மற்றும் எல் அண்டு டி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பலத்த அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்தது..
டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 996 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,682 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 182 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.59 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.98 லட்சம் கோடியை இழந்தனர்.

பலத்த அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் சரிந்து 40,145.50 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 162.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,767.75 புள்ளிகளில் முடிவுற்றது.