5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

 

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் 3 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த வியாழன்கிழமையன்று மட்டும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இருப்பினும், நேற்று பங்கு வர்த்தகம் மீண்டும் உயர்ந்தது. இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதி முடிவுகள் சிறப்பாக இருந்தது. கொரோனா வைரஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் வரும் என்ற தகவல் போன்ற பல்வேறு செய்திகள் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.160.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 16ம் தேதி) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…
பங்கு வர்த்தகம் உயர்வு

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 721.67 புள்ளிகள் உயர்ந்து 40,685.50 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 179.70 புள்ளிகள் உயர்வு கண்டு 11,930.35 புள்ளிகளில் முடிவுற்றது.