சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 111 புள்ளிகள் அதிகரிப்பு…

 

சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 111 புள்ளிகள் அதிகரிப்பு…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.19 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்கு சந்தைகளில் வாரத்தின் முதல் தினமான இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரும் என்ற மத்திய அரசு நியமனம் செய்த குழு தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், வங்கி துறையை சேர்ந்த பல நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 111 புள்ளிகள் அதிகரிப்பு…
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ, டி.சி.எஸ்., மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 111 புள்ளிகள் அதிகரிப்பு…
பஜாஜ் ஆட்டோ

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,492 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,169 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.159.58 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.19 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 449 புள்ளிகள் உயர்ந்தது.. நிப்டி 111 புள்ளிகள் அதிகரிப்பு…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 448.62 புள்ளிகள் உயர்ந்து 40,431.60 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 110.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,873.05 புள்ளிகளில் முடிவுற்றது.