இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மரண அடி வாங்கியது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.32 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்க உள்துறை சீனாவின் அண்ட் நிறுவனத்தை வர்த்தக கருப்பு பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளதால், அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 3ம் தேதிக்கு முன்னதாக பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் முனுசின் தெரிவித்தார்.

இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கோவிட்-19 மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால் சில ஐரோப்பிய நாடுகள் பள்ளிகள் அடைப்பு, அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது போன்ற எதிர்மறையான சர்வதேச செய்திகள் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தை வீழ்ச்சி அடைய வைத்தன. மேலும் முதலீட்டாளர்களும் லாப நோக்கில் பங்குகளை விற்று தள்ளியதும் பங்குச் சந்தைகளின் மோசமான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், டெக் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 29 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 818 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,823 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.27 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.32 லட்சம் கோடியை இழந்தனர்.

இந்திய பங்குச் சந்தைகளை கதற வைத்த அமெரிக்கா, கொரோனா வைரஸ்…. சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,066.33 புள்ளிகள் சரிந்து 39,728.41 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 290.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,680.35 புள்ளிகளில் முடிவுற்றது.