சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம்..

சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

லாக்டவுன் தளர்வு காரணமாக தேவை மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளதால் நம் நாட்டில் கடந்த செப்டம்பரில் தொழில்துறை நடவடிக்கை 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருக்கும் என்ற கணிப்பு, கடந்த செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனையில் முன்னேற்றம், அமெரிக்காவின் ஊக்குவிப்பு நடவடிக்கை போன்ற பல்வேறு காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.

சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம்..
இண்டஸ்இந்த் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டெக் மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம்..
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,541 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,128 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 148 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.156.94 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.82 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.82 லட்சம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 629.12 புள்ளிகள் உயர்ந்து 38,697.05 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 169.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,416.95 புள்ளிகளில் முடிவுற்றது.