நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை… டி.வி.எஸ்., சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ மகிழ்ச்சி..

 

நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை… டி.வி.எஸ்., சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ மகிழ்ச்சி..

கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை சிறப்பாக இருந்ததால், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 3.22 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2019 நவம்பர் மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி 2.66 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை… டி.வி.எஸ்., சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ மகிழ்ச்சி..
சோனாலிகா டிராக்டர்ஸ்

டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான சோனாலிகா கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 11,478 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் சோனாலிகா நிறுவனம் மொத்தம் (உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி) 92,913 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது.

நம்பிக்கை கொடுத்த வாகன விற்பனை… டி.வி.எஸ்., சோனாலிகா மற்றும் பஜாஜ் ஆட்டோ மகிழ்ச்சி..
பஜாஜ் இரு சக்கர தயாரிப்பு ஆலை

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 4.22 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும். 2019 நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 4.03 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.