Home வணிகம் மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம்.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஓ.என்.ஜி.சி., இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர்கிரிட் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேசமயம் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,126 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,662 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.172.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.31 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 694.92 புள்ளிகள் சரிந்து 43,828.10 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 196.75 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 12,858.40 புள்ளிகளில் முடிவுற்றது.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜாதிக்காரனுக்குத்தான் ஓட்டா? பரம்பரை பரம்பரையா ஒரே கட்சிக்குத்தான் ஓட்டா? கமல் ஆவேசம்

நாளை நம் தேசிய வாக்காளர் தினம். இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது. தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம்...

நடிகன் என்ற முகமூடி இல்லாமல் யதார்த்த மனிதனாக வந்தார் விஜய்சேதுபதி… நெகிழும் எஸ்.வி.சேகர்

அன்பு விஜய் சேதுபதி பொதுவெளியில் வரும் போது நடிகன் என்ற முகமூடியில்லாமல் ஒரு யதார்த்த மனிதனாக வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். MY BLESSINGS.என்று தெரிவித்திருக்கிறார் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான...

குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

தேனி பெரியகுளம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி...

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!