அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தல், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வாரம் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவில் இன்று அந்நாட்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., பஞ்சாப் நேஷனல் வங்கி, சிட்டி யூனியன் பேங்க், ஐ.டி.சி., என்.டி.பி.சி. உள்பட சுமார் 650க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல்

கடனை திரும்ப செலுத்துவதற்காக கால அவகாசம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று வருகிறது. வங்கி துறைக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் இன்று பங்குச் சந்தையில் பட்டியிலடப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்.. நிபுணர்கள் கணிப்பு.
உச்ச நீதிமன்றம்

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் இந்த வாரம் நடைபெற உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. இது தவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.