இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

4 தினங்கள் மட்டுமே நடைபெறும் இந்த வார பங்கு வர்த்தகத்தில், கொரோனா வைரஸ், பணவீக்கம் உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். நம் நாட்டில் வாரத்தக்கு வாரம் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. குணமடைந்தவர்கள் விகிதமும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடர்பாக பைசர் உள்பட பல நிறுவனங்கள் சாதகமான செய்திகளை தெரிவித்துள்ளன. தொடர்ந்து 3வது மாதமாக கடந்த அக்டோபரில் மொத்த விலை பணவீக்கம் (1.48 சதவீதம்) உயர்ந்துள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு, நவம்பர் 6ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகளின் கடன் மற்றும் டெபாசிட் குறித்த புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியா உள்ளிட்ட வளரும் சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். அது இந்த வாரமும் தொடர்ந்தால் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருக்கும்.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 40 காசுகள் வீழ்ச்சி கண்டு ரூ.74.60ஆக குறைந்தது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் தங்களது பொருளாதாரம் தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களும் இந்த வாரம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.