தீபாவளி பாலிபிரதிபாதா முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை…

தீபாவளி பாலிபிரதிபாதா முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை…

தீபாவளி பாலிபிரதிபாதா முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபங்களின் பண்டிகையான தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் தீபாவளி பண்டிகை கொண்டாடும் விதம் மாநிலங்களுக்கு இடையே வித்தியாசமாக இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேசமயம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 4 முதல் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பாலிபிரதிபாதா முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை…
பங்குச் சந்தை விடுமுறை

தீபாவளியன்று பங்குச் சந்தைகளில் மற்ற நாட்கள் போல் வர்த்தகம் நடக்காது. அன்றைய தினம் முகூர்த்த வணிகம் என்று சுமார் 1 மணி நேரம் நடைபெறும். வடஇந்தியாவில் தீபாவளியின் 4வது நாளில் பாலிபிரதிபாதா கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக அன்றைய தினம் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தீபாவளி பாலிபிரதிபாதா முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை…
பாலிபிரதிபாதாவை

அதன்படி இன்று (நவம்பர் 16) பாலிபிரதிபாதாவை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. நாளை முதல் பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும். இந்து காலாண்டர் ஆண்டான சாம்வாட் 2077 பிறப்பை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை 1 மணி நேரம் முகூர்த்த வணிகம் நடைபெற்றது.