2020 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்திய செயலிகள் இவைதான்!

 

2020 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்திய செயலிகள் இவைதான்!

2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தாலும், ஆன்லைன் செயல்பாடுகள், இணைய தேவை அதிகரித்தது என்றே சொல்லலாம். கடந்த ஆண்டில் மக்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருந்ததால், ஸ்மார்ட்போன்களே கதி என்று இருந்தனர். அதனால் கடந்த ஆண்டில், பல புதிய வசதிகளை அளிக்கும் செயலிகள் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிமானோர் யுடியூப் பார்வையிட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் , கடந்த ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்திய செயலிகள் எவை எனப் பார்க்கலாம்!

2020 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்திய செயலிகள் இவைதான்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் இரு தரப்புமே அதிக தரவிறக்கம் செய்த செயலியாக டிக் டாக் உள்ளது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு தடை விதித்தது. அமெரிக்காவிலும் டிக் டாக் செயலி செயல்பட நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் உலகம் முழுவதும், சிறு வீடியோ செய்து ஏற்றுபவர்கள் டிக் டாக் செயலியை அதிகமாக தரவிறக்கம் செய்துள்ளனர்.

டிக்டாக் செயலியை போலவே அதிகம் பேர் தரவிறக்கம் செய்த மற்றொரு செயலி பேஸ்புக். வீடுகளில் முடங்கிய மக்கள் வீடியோக்களை ஏற்றியதுபோலவே, பேஸ்புக் மூலம் தங்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். பேஸ்புக் செயலி மிகப்பரவலான அளவில் தகவல் பரிமாற்ற கருவியாகவும் செயல்பட்டுள்ளது. இதற்கடுத்து வாட்ஸ்அப் செயலி உள்ளது. குறுச்செய்திகளை அனுப்புவதற்கும், வீடியோ போன் வசதிகளுக்கு வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேஸ்புக் மெசெஞ்சர் செயலியும் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்தி மற்றும் வீடியோ கால் வசதி அளிக்கும் வசதிகளும் பேஸ்புக் மெசேஞ்சரில் பயன்படுத்தி உள்ளனர். இளந்தலைமுறையினரிடத்தில் அதிக வரவேற்பை இன்ஸ்ட்கிராம் செயலியும் அதிக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் பேஸ்புக், வாட்ஸ் அப், மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் ஆகியவை பேஸ்புக் நிறுவனம் அளிக்கும் செயலிகளாகும்.

2020 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்திய செயலிகள் இவைதான்!

கடந்த ஆண்டு பல்வேறு துறைகளும் ஆன்லைன் சேவைகளுக்கு மாறின. குறிப்பாக வேலைகள் வீட்டிலிருந்து செய்யப்பட்டதால் அலுவலக வேலைகளுக்கான மீட்டிங் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டில் ஜூம் செயலி, கூகுள் மீட் ஆகிவவையும் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஜூம் 4 வது இடத்தில் உள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்டோரில் 5 வது இடத்தில் உள்ளது.

அதேபோல பயனர்கள் எப்போதும் பயன்படுத்தும் செயலியாக யூ டியூப், ஜிமெயில் ஆகியவை உள்ளன. ஊரடங்கு காலத்தில் மக்கள் யு டியூபில் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த பட்டியலில் ஸ்நாப்சாட், டெலகிராம் செயலிகளும் இடம்பிடித்துள்ளன.