தட்டுதடுமாறி விற்பனை ஆரம்பித்த வாகன நிறுவனங்கள்… 13,865 கார்களை விற்பனை செய்த மாருதி

 

தட்டுதடுமாறி விற்பனை ஆரம்பித்த வாகன நிறுவனங்கள்… 13,865 கார்களை விற்பனை செய்த மாருதி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள லாக்டவுன் காரணமாக, இந்திய வாகன துறை வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி உள்பட பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு சிறிது தளர்த்தியது. இதனையடுத்து நாடு முழுவதும் வாகன நிறுவனங்களின் ஷோரூம்கள், தயாரிப்பு ஆலைகள் திறக்கப்பட்டன.

தட்டுதடுமாறி விற்பனை ஆரம்பித்த வாகன நிறுவனங்கள்… 13,865 கார்களை விற்பனை செய்த மாருதி

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மே மாதத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனையை தொடங்கின. எதிர்பார்த்தது போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அந்த மாதத்தில் பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. இருந்தாலும் விற்பனை நடந்ததால் வாகன நிறுவனங்கள் ஆறுதல் அடைந்தன. உதாரணமாக நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி கடந்த மே மாதத்தில் உள்நாட்டில் 13,865 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 2019 மே மாதத்தில் இந்நிறுவனம் 1.25 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது.

தட்டுதடுமாறி விற்பனை ஆரம்பித்த வாகன நிறுவனங்கள்… 13,865 கார்களை விற்பனை செய்த மாருதி

மகிந்திரா நிறுவனம் உள்நாட்டில் 9,076 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 79 சதவீதம் குறைவாகும். அந்நிறுவனத்தின் ஏற்றுமதியும் அந்த மாதத்தில் 80 சதவீதம் குறைந்துள்ளது. அந்த மாதத்தில மகிந்திரா நிறுவனம் மொத்தமே 484 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டில் 6,883 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அந்நிறுவனம் 42,502 கார்களை விற்பனை செய்து இருந்தது.