வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும் – பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும் – பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

வரும் வாரத்தில் இண்டிகோ, எல் அண்டு டி, மதர்சன் சுமி, சைடஸ், பி.பி.சி.எல்., என்.ஐ.ஐ.டி. மற்றும் பி.ஐ. இண்டஸ்ட்ரீஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளிவருகிறது. கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டும் அடுத்த மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற பகுதிகளில் லாக்டவுனில் தளர்வுகள் 3 கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதேசமயம் நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும் – பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 1.82 லட்சத்தை தாண்டி விட்டது. கொரோனா பாதிப்பு 1.50 லட்சத்தை தொட்ட அடுத்த 4 நாட்களில் இது நிகழ்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு தீவிரமாக பரவி வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். சீனாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஹாங்காங்கிற்கான அமெரிக்காவின் சிறப்பு கையாளுதலை நீக்குவதற்கான நடவடிக்கையை தொடங்க தனது நிர்வாகத்துக்கு டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் அமெரிக்காவில் சீனாவை சேர்ந்த சில பிரிவு மாணவர்கள் நுழைய தடை விதித்தார்.

வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும் – பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

கடந்த ஏப்ரல் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை வரும் வாரம் வாகன நிறுவனங்கள் வெளியிடும். மேனுபாக்சரிங் மற்றும் சேவைகள் துறைக்கான கடந்த மே மாத பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் டேட்டா இந்த வாரம் வெளிவருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வீசஸ் பி.எம்.ஐ. அதுவரை இல்லாத அளவுக்கு 5.4 சதவீதமாகவும், மேனுபாக்சரிங் பி.எம்.ஐ. 27.4 சதவீதமும் குறைந்து இருந்தது. அதனால் கடந்த மே மாதத்தில் ஏதாவது முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் வரும் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.