முதலீட்டாளர்களுக்கு ரூ.1.61 லட்சம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தையில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. வோடாபோன் ஐடியா நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியானது. அதனால் வோடாபோன் ஐடியா பங்கு விலை இன்று ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் வாங்கினர். இது போன்ற காரணங்களால் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

ஓ.என்.ஜி.சி.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, ஹீரோமோட்டோகார்ப், எல் அண்டு டி, ஐ.டி.சி., நெஸ்லே இந்தியா மற்றும் மாருதி உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., ஆக்சிஸ் வங்கி, டைட்டன் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஆக்சிஸ் வங்கி
மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,420 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 931 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 160 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.127.09 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.61 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 223.51 புள்ளிகள் உயர்ந்து 32,424.10 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 90.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,580.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close