பங்குச் சந்தையில் மீண்டும் லாபத்தை அள்ளிய முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 595 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது.

ஐ.டி.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, ஹீரோமோட்டோகார்ப், எச்.டி.எப்.சி.வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, மாருதி மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஐ.டி.சி., ஸ்டேட் வங்கி மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

எல் அண்டு டி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,527 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 808 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.125.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.87 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 595.37 புள்ளிகள் உயர்ந்து 32,200.59 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 171.00 புள்ளிகள் அதிகரித்து 9,485.95 புள்ளிகளில் நிலைகொண்டது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...