ரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…

ரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…

ஈகை பெருநாளை முன்னிட்டு நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இன்று தான் இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினம். இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் பின்னர் படிப்படியாக சரிவை சந்தித்தது. கடைசியில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் முடிவடைந்தது.

ரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், அல்ட்ராடெக்சிமெண்ட், இண்டஸ்இந்த் வங்கி, நெஸ்லே இந்தியா மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், டி.சி.எஸ்., பஜாஜ் பைனான்ஸ், சன்பார்மா மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,203 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,138 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 193 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.60 லட்சம் கோடியாக சரிந்தது. இதனையடுத்து இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை இழந்தனர்.

ரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 63.29 புள்ளிகள் குறைந்து 30,609.30 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி புள்ளிகள் சரிந்து புள்ளிகளில் முடிவுற்றது.