ரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…

ரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…

கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. ரிசர்வ் வங்கி யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) 0.40 சதவீதம் குறைப்பு, வங்கி கடன் மாத தவணை தொகையை செலுவதற்கான காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு போன்ற போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்திதான் என்றாலும், இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை பகுதியில் இருப்பது போல் காணப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மேலும் கடன் தொகையை செலுத்துவதற்கான காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு இருப்பது வங்கிகளுக்கு சிக்கலலை ஏற்படுத்தியது. இதனால் பங்குச் சந்தைகளில் வங்கி பங்குகளின் விலை சரிவு கண்டது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

ரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ், ஏசியன்பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகிந்திரா மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி., பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 967 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,322 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.63 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ரூ.61 ஆயிரம் கோடியை இழந்தனர்.

ரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 260.31 புள்ளிகள் குறைந்து 30,672.59 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 67.00 புள்ளிகள் வீழ்ந்து 9,039.25 புள்ளிகளில் முடிவுற்றது.