2020க்கு குட்பை சொன்ன மாஸ்டர்!

 

2020க்கு குட்பை சொன்ன மாஸ்டர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் போஸ்டர் புரொடக்ஷன் முடிந்து தயாரான நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணாமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

Image

இதை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் உலா வந்தன. ஆனால் நிச்சயம் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என படக்குழுவினர் தெரிவித்தனர். அதன்படி மாஸ்டர் படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் மட்டும் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் பட போஸ்டர்களை வெளியிட்டு 2020 ஆம் ஆண்டுக்கு படக்குழு விடைக் கொடுத்தது. மாஸ்டர் படத்தின் நான்கு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், இத்துடன் 2020 முடிவதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. 2020, signing off with exclusive posters of #Master எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம், இந்த ஆண்டு அதாவது நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ட்ரெய்லர் வெளியாகாது என்பதை தயாரிப்பு நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.