கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம்

 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம்

கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக்கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம்

பல இடங்களில் அதிகாரிகள் கெஞ்சிகேட்டு ஊசி செலுத்துகிறார்கள். தடுப்பூசி அதிகாரிகளூக்கு பயந்து ஆண்களும் பெண்களும் ஆற்றில் குதித்து தப்பிக்கும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதனால் சில இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 5 கிலோ தக்காளி இலவசம், முட்டை இலவசம், பிரியாணி இலவசம் என்று அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அறிவித்து அதை செயல்படுத்துகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம்

இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இதே நிலைமைதான் இருக்கின்றன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதில் மக்கள் இலக்கினை அடைந்துவிட்டால், 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு பீர் இலவசம் என்று ஒரு பீர் கம்பெனி அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், அருணாசலபிரதேசம் மாநிலம் லோயர் சுபன்சிறி மாவட்டம் யாழலி வட்டத்தில் உள்ள கிராமங்களில் 45 வயதை தாண்டியவர்கள் 1,399 பேர் இருக்கிறார்கள். தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் அச்சத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இதனால் வேறு வழியின்றி, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 20 கிலோ அரிசி இலவசம் என்று கடந்த 7ம் தேதி அன்று அறிவித்தார் அந்த வட்டத்தின் அதிகாரி தஷி வங்சுக் தாங்டோக். 80 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு அரிசியை வாங்கிச்சென்றுள்ளனர். மிச்சமிருப்போரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு அரிசியை வாங்கிச்செல்வார்கள் என்று அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.