30 நாளில் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் காலி…. ஹீரோ மோட்டோகார்ப் தகவல்

30 நாளில் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் காலி…. ஹீரோ மோட்டோகார்ப் தகவல்

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 26.88 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் மாதத்தில் ஹீரோ நிறுவனம் மொத்தம் 6.16 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

30 நாளில் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் காலி…. ஹீரோ மோட்டோகார்ப் தகவல்

இரு சக்கர மற்றும் வர்த்தக வாகனங்களை தயாரித்து வரும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 2.78 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 ஜூன் மாதத்தை காட்டிலும் 31 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

30 நாளில் 4.50 லட்சம் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் காலி…. ஹீரோ மோட்டோகார்ப் தகவல்

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 38,065 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. 2019 ஜூன் மாதத்தில் அந்நிறுவனம் மொத்தம் 58,339 பைக்குகளை விற்பனை செய்து இருந்தது. ஆக கடந்த மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வாகன விற்பனை 35 சதவீதம் சரிவு கண்டுள்ளது.