மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் வாகன விற்பனை… 57,428 கார்களை விற்று தள்ளிய மாருதி சுசுகி இந்தியா

மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் வாகன விற்பனை… 57,428 கார்களை விற்று தள்ளிய மாருதி சுசுகி இந்தியா

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 57,428 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிட்டால் மாருதி நிறுவனத்தின் விற்பனை 54 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 ஜூன் மாதத்தில் 1.24 லட்சம் கார்களை விற்பனை செய்து இருந்தது.

மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் வாகன விற்பனை… 57,428 கார்களை விற்று தள்ளிய மாருதி சுசுகி இந்தியா

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள லாக்டவுன் காரணமாக, இந்திய வாகன துறை வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி உள்பட பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உள்நாட்டில் ஒரு கார் கூட விற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு சிறிது தளர்த்தியது. இதனையடுத்து
அந்த மாதத்தில் மாருதி சுசுகி உள்நாட்டில் 13,865 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் வாகன விற்பனை… 57,428 கார்களை விற்று தள்ளிய மாருதி சுசுகி இந்தியா

விவசாய கருவிகள் மற்றும் என்ஜினீரியங் தயாரிப்பு நிறுவனமான எஸ்கார்ட்ஸ், கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 10,851 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 21.1 சதவீதம் அதிகமாகும். 2019 ஜூன் மாதத்தில் எஸ்கார்ட்ஸ் நிறுவனம் மொத்தம் 8,960 டிராக்டர்களை விற்பனை செய்து இருந்தது.