பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.61 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது..

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.61 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது..

இன்று முதல் அன்லாக்டவுன் தொடங்கியது. மால்கள், ரெஸ்ட்ராண்ட்ஸ், ஹோட்டல்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன. தொடர்ந்து 3 மாதங்களாக இந்திய பங்குகளை விற்பனை செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் இந்த ஜூன் மாதத்தில் இதுவரை ரூ.18,613 கோடிக்கு பங்குகளை வாங்கி குவித்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமை பங்கு வெளியீடு வெற்றி, கோடக் மகிந்திரா வங்கியில் உதய் கோடக் தனது பங்குகளில் 2.8 விற்பனை செய்ததில் குறிப்பிடத்தக்க அன்னிய முதலீடு வந்தது.

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.61 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது..

அமெரிக்க வேலைவாய்ப்பு டேட்டாவில் எதிர்பாராத முன்னேற்றம் உலக பொருளாதாரம் விரைவில் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது இது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் நன்றாக இருந்தது. ஆனால் திடீரென சரிவு காண தொடங்கியது இறுதியில் சிறிய ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் மகிந்திரா, அல்ட்ராடெக் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.61 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,811 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 858 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.136.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.61 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.61 ஆயிரம் கோடி லாபம்.. சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்தது..

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 83.34 புள்ளிகள் உயர்ந்து 34,370.58 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,167.45 புள்ளிகளில் நிலைகொண்டது.