மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம்…

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஸ்டேட் வங்கியின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. ஜியோவில் அபுதாபியை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்ததையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்ந்தது மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, என்.டி.பி.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டி.சி.எஸ்., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,052 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 530 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 135 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.135.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 306.54 புள்ளிகள் உயர்ந்து 34,287.24 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 113.05 புள்ளிகள் ஏற்றம் கண்ட 10,142.15 புள்ளிகளில் முடிவுற்றது.