பங்குச் சந்தைகளில் சரிவு.. ஆனாலும் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…

பங்குச் சந்தைகளில் சரிவு.. ஆனாலும் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…

கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. இன்று காலையில் வர்த்தகம் சிறிய சரிவுடனே தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிவு கண்டது, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

பங்குச் சந்தைகளில் சரிவு.. ஆனாலும் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா, பார்தி ஏர்டெல், சன்பார்மா, எச்.சி.எல்.டெக்னாலஜிஸ், பவர் கிரீட் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேசமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் சரிவு.. ஆனாலும் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,304 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,148 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 156 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.49 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக இன்று முதலீட்டளார்கள் பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்தனர்.

பங்குச் சந்தைகளில் சரிவு.. ஆனாலும் ரூ.36 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.84 புள்ளிகள் உயர்ந்து 33,980.70 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,029.10 புள்ளிகளில் முடிவுற்றது.