இந்தியா-சீனா மோதல் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-சீனா மோதல் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

பொதுவாக ஜூன் 30ம் தேதியோடு நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகி விடும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 31ம் தேதி வரை கடந்த மார்ச் நிதிநிலை முடிவுகளை தாக்கல் செய்ய நிறுவனங்களுக்கு செபி காலஅவகாசம் வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த வாரம் ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது நிதிநிலை முடிவுகளை வெளியிடும். இந்த வாரம் ஓ.என்.ஜி.சி., வோடாபோன் ஐடியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எம்.ஆர்.எப். உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்தியா-சீனா மோதல் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது. உலக முழுவதும் தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி விட்டது. 2020 ஜூன் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை இந்த வாரம் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட உள்ளன.

இந்தியா-சீனா மோதல் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

லாக்டவுன் விதிமுறைகளை மேலும் தளர்த்தும் வகையில் அன்லாக் 2.0 அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என எதிர்பார்க்கபபடுகிறது. அதேசமயம் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால் லாக்டவுனை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எல்லையில் இந்தியாவும், சீனாவும் தங்களது பகுதியில் படைகளை குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி மற்றும் கடந்த மார்ச் காலாண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை குறித்து புள்ளிவிவரங்கள் வரும் செவ்வாய்க்கிழமையன்று வெளிவருகிறது. கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய குறித்த புள்ளிவிவரம் ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியா-சீனா மோதல் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

இதுதவிர சர்வதேச சந்தைகயில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரம், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.