கொரோனா நிலவரம் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கொரோனா நிலவரம் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி விட்டது. இதுதவிர சீனா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதால், இந்த தொற்று நோய் நீண்ட காலம் இருக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. வரும் 25ம் தேதி இந்த மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்றைய தினம் ஜூன் மாதத்துக்கான பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும்.

கொரோனா நிலவரம் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

வரும் வாரம் ஏசியன் பெயிண்ட்ஸ், பேங்க் ஆப் பரோடா, பெர்ஜர் பெயிண்ட்ஸ், கெயில், இந்தியா சிமெண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. இந்தியா-சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றம் கூடிக்கொண்டே செல்வது போல் தெரிகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் வரும் 26ம் தேதி வெளிவருகிறது.

கொரோனா நிலவரம் உள்ளிட்டவை வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்காவில் வரும் வாரம் அந்நாட்டின் வீடுகள் விற்பனை, புதிய வீடுகள் விற்பனை, மொத்த உள்நாட்டு உற்பத்தி, சரக்குகள் வர்த்தகம், வேலையில்லாதோர் கோரிக்கை உள்ளிட்ட முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடுகிறது. இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் வரும் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.