தொடர்ந்து 2வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி லாபம்

தொடர்ந்து 2வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் கோடக் மகிந்திரா வங்கி புரோமோட்டர் உதய் கோடக் 2.83 சதவீத பங்குகளை விற்பனை செய்தார். இதனால் கோடக் மகிந்திரா வங்கியின் பங்கு விலை உயர்ந்தது. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு போன்றவை பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு பாதை போட்டது.

தொடர்ந்து 2வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், கோடக்மகிந்திரா வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் பவர்கிரீட் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி, ஐ.டி.சி., என்.டி.பி.சி., நெஸ்லே இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,736 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 723 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.131.92 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.73 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி லாபம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 522.01 புள்ளிகள் உயர்ந்து 33,825.53 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 152.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,979.10 புள்ளிகளில் முடிவுற்றது.