பங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி லாபம்

பங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி லாபம்

அமெரிக்க பெடரல் வங்கி அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது. இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு ஏற்றத்துடன் தொடங்கியது போன்ற காரணங்களால் காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இந்த சூழ்நிலையில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு மோதி கொண்டதில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி 2 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியானது இதனால் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. இருப்பினும் பங்கு வர்த்தகம் பின்னர் சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் கண்டது.

பங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி லாபம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி., எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, இன்போசிஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, ஐ.டி.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி லாபம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,193 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,380 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.44 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.62 ஆயிரம் கோடி லாபம் பார்ததனர்.

பங்கு வர்த்தகத்தின் கிடுகிடு ஏற்றத்துக்கு பிரேக் போட்ட இந்திய-சீன மோதல்… முதலீட்டாளர்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி லாபம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.42 புள்ளிகள் உயர்ந்து 33,605.22 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 100.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,914.00 புள்ளிகளில் முடிவுற்றது.