பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்…. ரூ.1.16 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…

பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்…. ரூ.1.16 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் பகுதிகளில் ஜூலை வரை லாக்டவுன் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் திருப்திகரமாக இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.

பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்…. ரூ.1.16 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், சன்பார்மா மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, என்.டி.பி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்…. ரூ.1.16 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,334 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,231 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.132.82 லட்சம் கோடியாக வீழ்ந்தது. ஆக,இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.16 லட்சம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தைகளை சிதைத்த கொரோனா வைரஸ்…. ரூ.1.16 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 552.09 புள்ளிகள் குறைந்து 33,228.80 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 159.20 புள்ளிகள் இறங்கி 9,813.70 புள்ளிகளில் நிலைகொண்டது.