பங்குச் சந்தையில் கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.1.49 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

பங்குச் சந்தையில் கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.1.49 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றோடு முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. இந்த வாரத்தில் கடந்த 5 வர்த்தக தினங்களில் 3 தினங்கள் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. 2 தினங்கள் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் நிலவரம், முகேஷ் அம்பானியின் ஜியோ பங்கு விற்பனை, நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது போன்ற சர்வதேச நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பங்குச் சந்தையில் கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.1.49 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.98 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.135.47 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.49 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்குச் சந்தையில் கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.1.49 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 506.35 புள்ளிகள் குறைந்து 33,780.89 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 169.25 புள்ளிகள் சரிவு கண்டு 9,972.90 புள்ளிகளில் முடிவுற்றது.