பங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி

அமெரிக்க பெடரல் வங்கி இந்த ஆண்டு இறுதி வரை அல்லது பொருளாதாரம் வலுவான மீட்சியை காட்டும் வரை வட்டி விகிதத்தை 0.00 முதல் 0.25 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மேலும் 2022 வரை வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தாது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிவு கண்டது. இது போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

அமெரிக்க பெடரல் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், ஹீரோமோட்டோகார்ப் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஸ்டேட் வங்கி, சன்பார்மா, மாருதி, பஜாஜ் பைனான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,017 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,534 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.133.15 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.48 லட்சம் கோடியை இழந்தனர்.

ஸ்டேட் வங்கி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 708.68 புள்ளிகள் குறைந்து 33,538.37 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 214.15 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,902.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...

மாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.

மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...
Do NOT follow this link or you will be banned from the site!