முதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…

முதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அன்லாக் 1.0 தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்வுடன் ஆரம்பித்தது இது போன்ற சாதகமான அம்சங்கள் பங்குச் வர்த்தகத்தின் உயர்வுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தன. அதேசமயம் கடந்த மே மாதத்தில் வாகன விற்பனை குறைந்தது, தொழில்துறை நடவடிக்கை சரிந்தது போன்றவை பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல், ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி. நிறுவனம், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வங்கி உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், சன்பார்மா, ஹீரோமோட்டோகார்ப் மற்றும் எல் அண்டு டி ஆகிய 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,889 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 591 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.130.19 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.10 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 879.42 புள்ளிகள் உயர்ந்து 33,303.52 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 245.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,826.15 புள்ளிகளில் முடிவுற்றது.