பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி லாபம்…

பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி லாபம்…

கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டவர்கள் விகிதம் அதிகரித்து வருவது முன்னேற்றமான விஷயமாகும். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன படைகள் பின் வாங்கி தொடங்கியுள்ளன. தொற்று நோய் வேகமாக பரவி வந்தாலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி லாபம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ், மாருதி, டி.சி.எஸ். மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி லாபம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,635 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,157 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 188 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.144.34 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.84 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்குச் சந்தைகளில் களை கட்டிய வர்த்தகம்…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி லாபம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 465.86 புள்ளிகள் உயர்ந்து 36,487.28 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 156.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,763.65 புள்ளிகளில் முடிவுற்றது.