இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

இந்த வாரம் சுஸ்லான் எனர்ஜி, டிஷ் டி.வி. உள்பட 119 நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. அதேசமயம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சவுத் இந்தியன் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகிய மூன்றும் மட்டும் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை முதலாவதாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வரும் 9ம் தேதி வெளியிடுகிறது.

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போதும் இது பெரும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. ரூபாய் வெளிமதிப்பு உயர்வது சந்தைக்கு சாதகமான விஷயமாகும்.

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

கடந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை வாங்கி குவித்தனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கினால் அது பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருக்கும். கடந்த மே மாத தொழில்துறை உற்பத்தி மற்றும் கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரங்கள் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.

இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்? பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு…

இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சீனாவின் ஜூன் மாத பணவீக்கம் உள்பட உலக நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.