இந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.71 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 850 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. இந்த வாரத்தின் முதல் 2 தினங்களில் வர்த்தம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. இருப்பினும் அதற்கு அடுத்த 3 நாட்களில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. கொரோனா வைரஸ், வாகன விற்பனை, நிதிநிலை முடிவுகள், சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலவரம் ஆகியவற்றின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

ரூபாய் வெளிமதிப்பு உயர்வு

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.79 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.71 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தேசிய பங்குச் சந்தை

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 850.15 புள்ளிகள் உயர்ந்து 36,021.42 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 124.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,607.35 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத 10 விஷயங்கள் #ParentingTips

குழந்தைகள் புதிய விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றால், அது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ... ஏதோ ஒன்றைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் பள்ளியில் பாடங்கள், ஹோம் வொர்க், மனப்பாடம்... என ஆயிரம் டென்ஷன்களோடு...

“மாலில் வேலை செய்வதால் மானம் போகுது ” -மாலில் வேலை செய்ததால் மனைவியின் தலையை வெட்டி போலீசில் சரண்

பீகாரில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் பலரை வேதனைப்பட வைத்துள்ளது .பீகாரின் , பக்சர் மாவட்டத்தில் அல்கு யாதவ் மற்றும் சாந்தினிதேவி தம்பதிகளுக்கு ஒரு குழந்தையுள்ளது .அவர்கள் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர்...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில்,...

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமான் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தனது கருணை பார்வையால் ஆட்கொண்டு வருகிறார். கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். ஆலயம் பலவற்றில் அழகுற...