கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

 

கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

தொடர்ந்து கடந்த 6 வாங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர் ஏற்றம் கண்டது. இந்நிலையில் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், கோடக் மகிந்திரா வங்கி, எச்.டி.எப்.சி., மாருதி சுசுகி இந்தியா, டெக் மகிந்திரா மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட சுமார் 600 நிறுவனங்கள் தங்களது நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. ஆர்.இ.ஐ.டி. நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நாளை தொடங்குகிறது. வரும் புதன்கிழமையன்று புதிய பங்கு வெளியீடு முடிவடைகிறது. யெஸ் பேங்கின் தொடர் பங்கு வெளியீடு நாளை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

நம் நாட்டில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. உலக முழுவதுமாக கொரோனா வைரஸால் மொத்தம் 1.59 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.43 லட்சம் பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் மனித சமூதாயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரும் சனிக்கிழமையன்று வெளியிட உள்ளன. தற்போது தனிமைப்படுத்துதல் மண்டலம் அல்லாத பகுதிகளில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டன. கடந்த ஜூன் மாதத்தில் வாகன விற்பனை முந்தைய மே மாதத்தை காட்டிலும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் வர்த்தக வாகன விற்பனை நிலவரம் தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.

கொரோனா வைரஸ் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்- நிபுணர்கள் கணிப்பு

வரும் வியாழக்கிழமை மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்று ஜூலை மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். இந்த வாரம் அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் கூட்டம் நடைபெறுகிறது. அவ்வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றங்களும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.