பங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..

பங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..

தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை புதிய உச்சத்தை தொட்டது, சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது, வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது போன்ற சாதகமான அம்சங்கள் நிலவிய போதும் வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததே சரிவுக்கு முக்கிய காரணம்.

பங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி, டைட்டன், பவர்கிரிட், ஐ.டி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர், டாடா ஸ்டீல், மாருதி, இன்போசிஸ், எல் அண்டு டி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,172 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,471 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 158 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.76 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.47 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 58.81 புள்ளிகள் சரிந்து 37,871.52 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 29.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,132.60 புள்ளிகளில் முடிவுற்றது.