இந்த வாரம் இந்த விஷயங்கள கொஞ்சம் பார்த்துகோங்க.. இந்த வார பங்கு வர்த்தகம் குறித்து நிபுணர்கள் கணிப்பு

இந்த வாரம் இந்த விஷயங்கள கொஞ்சம் பார்த்துகோங்க.. இந்த வார பங்கு வர்த்தகம் குறித்து நிபுணர்கள் கணிப்பு

இந்த வாரம் 260க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் மற்றும் ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் இந்த வாரம் வெளிவருகிறது. கடந்த சில தினங்களாக நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் (62.94 சதவீதம்) நன்றாக உள்ளது.

இந்த வாரம் இந்த விஷயங்கள கொஞ்சம் பார்த்துகோங்க.. இந்த வார பங்கு வர்த்தகம் குறித்து நிபுணர்கள் கணிப்பு

கொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி உருவாக்கத்தில் நல்ல முன்னேற்றமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ரசாயன தயாரிப்பு ரோஸ்சாரி பயோடெக் நிறுவனத்தின் பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. வரும் 24ம் தேதியன்று இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் வெளிவருகிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன.

இந்த வாரம் இந்த விஷயங்கள கொஞ்சம் பார்த்துகோங்க.. இந்த வார பங்கு வர்த்தகம் குறித்து நிபுணர்கள் கணிப்பு

இதுதவிர, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.