முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி லாபம்…..சென்செக்ஸ் 429 புள்ளிகள் உயர்ந்தது..

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் முடிவடைந்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா, டைட்டன், டாடா ஸ்டீல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஆக்சிஸ் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மகிந்திரா அண்டு மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,721 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,042 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 127 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.59 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.46 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 429.25 புள்ளிகள் உயர்ந்து 35,843.70 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 121.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,551.70 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...